சென்னை தரமணியில் குடிநீரில் சாக்கடைநீர் கலந்து வருவதாகக் கூறி சுத்தமான குடிநீர் வரும் வரை வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கையில் பதாகையுடன் இளைஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தரமணி பாரதி யமுனா தெரு பகுதியில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருவதால் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவுகள் கலப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.