தருமபுரி அருகே காதலித்து ஏமாற்றிய இளைஞருடன் சேர்த்து வைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட இளம்பெண் கையில் விஷ பாட்டிலுடன் தர்ணாவில் ஈடுப்பட்டார். அனிதாதேவி என்ற பெண் நவீன்குமார் என்ற இளைஞரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில், திடீரென பேசுவதை நிறுத்திய இளைஞர் அந்த பெண்ணை நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அனிதாதேவி, காதலன் வீட்டிற்கு சென்று கேட்ட போது அவரது பெற்றோர்கள் அடித்து அவமானபடுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார்.இதையும் படியுங்கள் : சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து