நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் மகளிர் கல்லூரி முன்பு ஆபத்தான வகையில் பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. நாங்குநேரி நான்கு வழிச்சாலை, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம், ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில், இரு இளைஞர்கள் பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.