திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட அச்சரப்பாக்கம் சாலை, பஜார் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நான்கைந்து மாடுகள் சாலையை மறித்தவாறு சுற்றித்திரிகின்றன. சன்னதி தெருவில் கும்பலாக உலா வந்த மாடுகள் ஒன்றுக்கு ஒன்று சண்டை போட்டுக் கொண்டு துள்ளி ஓடின.இதனைப் பார்த்து பீதியடைந்த பாதசாரிகள், அலறியடித்துக் கொண்டு தப்பியோடினர். அசம்பாவிதம் நிகழ்வதற்குள் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.