கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அரசு மருத்துவமனைக்குள் அதிக சத்தத்துடன் பாடல்களை போட்டு பணியாளர்கள் ஆடிப்பாடி ஓணம் பண்டிகையை கொண்டாடியதால் நோயாளிகள் நிம்மதி இழந்தனர். பணி நேரத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது மட்டுமில்லாமல், அதே தளத்தில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு செயல்படுகிறது என்றும் பாராமல் அதிக சத்தத்துடன் சினிமா பாடல்களை போட்டு ஊழியர்கள் நடனமாடினர். நோயாளிகள் குவிந்திருக்க நடனம் ஆடிய மருத்துவ பணியாளர்கள் மீது சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. இதையும் பாருங்கள்: நோயாளிகள் குவிந்திருக்க ஆட்டம் போட்ட பணியாளர்கள்...! | Kanyakumari | Hospital | Dance | Onam