திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கன்னடபாளையத்தில் கட்டப்பட்ட ரேஷன்கடை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே தரைத்தளம் உள்வாங்கியதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். எனவே, தரமற்ற முறையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.