புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிய நீர்தேக்கத் தொட்டி கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.