கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மேம்பாலத்தில் சேதமடைந்த இரும்புப் பட்டை மீது கல் வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் இடையே பொருத்தப்பட்டிருந்த இரும்புப் பட்டை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில், பாலத்தின் நடுவே சேதமடைந்து மேலே தூக்கியபடி காணப்படும் இரும்புப் பட்டை மீது கல் வைத்து துணியால் மறைக்கப்பட்டது. இதனால் பாலத்தின் இணைப்பில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கும் வாகன ஓட்டிகள், பாலத்தை விரைந்து சீரமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.