திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்ட தக்காளி பயிர்களில் வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.