தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர். உத்தமபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கம்பம், குள்ள கவுண்டம்பட்டி, சுருளிப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோவிந்தன் பட்டி, சின்னமனூரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் சூழலில் கனமழையால் 80 ஏக்கரிலான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்தது. ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.