திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து கிடப்பதால் இறந்தவர் உடலை மிகுந்த சிரமத்துடன் எடுத்து சென்ற கிராம மக்கள், தரைப்பாலத்தை விரைந்து சரிசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். குதிரையாறு அணை கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி கச்சம்மாள் வயதுமூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். கடந்த மாதம் பெய்த கனமழையால் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்துள்ளது. வேறு வழியும் இல்லாததால் சேதமடைந்த தரைப்பாலம் வழியாகவே, மூதாட்டி உடலை மிகுந்த சிரமத்துடன் எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.