திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து சேதமடைந்துள்ளதால் தண்ணீரை சேமிக்க வழியில்லாமல் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். செம்பேடு கிராமம் அருகே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தடுப்பணை 2015 ஆம் ஆண்டில் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்கால் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக்கூறும் விவசாயிகள், தடுப்பணையை சீரமைத்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் சூழல் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.