தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்ததால் உழவர் பெருமக்கள் கவலையடைந்துள்ளனர். உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, உத்தமபாளையம், கலுமேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் 10 ஏக்கரிலான நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன. இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.