கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஐவதகுடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், கட்டடங்கள் சிதிலமடைந்திருப்பதாக எழுந்த புகார் குறித்து விருத்தாச்சலம் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறைகளை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு, விரைந்து பள்ளியை சீரமைக்க வலியுறுத்தினார். ஐவதகுடி அரசு மாதிரி பள்ளியில், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், மேற்கூரைகள் சேதமடைந்தும் காணப்படுவதோடு, மூன்றாவது தளத்தில் வகுப்பறை மற்றும் கழிவறைகளின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.