விளையாட்டுப் போட்டியின் போது அசம்பாவித சம்பவங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக திட்டம் வகுக்க தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 2020ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் பந்து தாக்கி லோகநாதன் என்பவர் உயிரிழந்த வழக்கில், போட்டி ஏற்பாட்டாளர்கள் ராசு மற்றும் ஐயப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, மரணம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கமும் இல்லை எனக் கூறி ராசு மற்றும் ஐயப்பன் மீதான வழக்கை ரத்து செய்ததுடன், லோகநாதனின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கும் உத்தரவிட்டார்.