திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடி காட்டு ஓடையில் 30.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியை நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் மூலம் இயங்கும் டால்மியா பாரத் பவுண்டேஷன் மூலம் இந்த தடுப்பணை கட்டப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.