கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரின் மகன் 2 ஆண்டுக்கு பிறகு மதுரை அருகே கைது செய்யப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு துர்கா பிரசாத் என்ற தலித் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் நெருக்கமாக இருந்த ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சர் பினிபே விஸ்வரூப்பின் மகனான பினிபே ஸ்ரீகாந்த்துக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை, காரில் தப்பி செல்ல முயன்றபோது மதுரையில் வைத்து ஆந்திர போலீஸார் மடக்கி பிடித்தனர். பின்னர் கைது செய்யப்பட்டு திருமங்கலம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்திய அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்ததால் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, ஆந்திரா அழைத்து செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.