2026 சட்ட மன்ற தேர்தல் பணிக்காக, தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வத்தை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்த வினோஜ் பி செல்வம் கடந்த 2007ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை