புதுச்சேரியில் ஆபாச வீடியோ அனுப்ப கூறி சிறுமிக்கு மிரட்டல் விடுத்ததாக பிரபல யூடியூபர் மகனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியை சேர்ந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழக்கமாகிய நபர் திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதோடு, ஆபாச வீடியோவை அனுப்பி தொந்தரவு செய்திருக்கிறார்.இது குறித்து அவரது தாய் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நிலையில் அந்நபர் மதுரையை சேர்ந்த யூடியூபர் சிக்கா சுமியின் மகனான அஷ்ரப் அலி என்பது தெரிய வந்தது.இதனையடுத்து போக்சோ வழக்கில் அவரை கைது செய்து போலீசார் விசாரித்ததில் பல பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்தது தெரிய வந்தது.