விழுப்புரத்தில், மாவட்ட SP-யை சந்திக்க வந்த சிவி.சண்முகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அவர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து புகார்கள் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் போலீசார் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது ஆதரவாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது