கணவனுடன் ஏற்பட்ட தகராறில், தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்த பெண். சேர்ந்து வாழலாம் எனக்கூறி மனைவியை அழைத்த கணவன். உயிரே போனாலும் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என தீர்க்கமாக கூறிய மனைவி. ஆத்திரத்தில் மனைவியை அடிக்க பாய்ந்த கொடூரன். விசாரிக்க சென்ற தலைமை காவலருக்கு நேர்ந்த கொடூரம். நடந்தது என்ன?இரவு நேரம்... ஒரு ஆண் போலீஸும், ஒரு பெண் போலீஸும் ஸ்டேஷனுக்கு தலைதெறிக்க ஓடிவந்துருக்காங்க. கையில வெட்டு காயத்தோட ரத்தம் சொட்ட சொட்ட ஓடி வந்த தலைமை காவலர் முருகன பாத்து, ஷாக்கான சக காவலர்கள், முதல அவர மீட்டு ட்ரீட்மெண்டுக்காக ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. அதுக்குபிறகு, அங்க இருந்த உயர் அதிகாரிகள், லேடி போலீஸ்கிட்ட என்ன நடந்ததுன்னு விசாரிச்சப்ப தான், ரெண்டு பேரும் எதுக்காக தலைதெறிக்க ஓடி வந்தாங்க, முருகனுக்கு என்ன நடந்துச்சு அப்டிங்குறதுக்கான காரணம் தெரிய வந்துச்சு. நெல்லை, அம்பாசமுத்திரத்துல உள்ள பொத்தை பகுதிய சேர்ந்தவர் 30 வயசான இசக்கி பாண்டி. இவரோட மனைவி மகாலட்சுமி. இசக்கி பாண்டி ஒழுங்கா வேலைக்கு போகாம குடியும் கும்மாளமுமாவே இருந்ததா சொல்லப்படுது.அதுமட்டுமில்லாம, மனைவி மகாலட்சுமி கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வச்சிருந்த காச எடுத்துட்டு போய், குடிச்சிட்டு வந்துருவாராம் இசக்கி பாண்டி. மனைவி காசுல மூக்கு முட்ட குடிச்சிட்டு, அதே மனைவிய தகாத வார்த்தைகளால பேசி அடிச்சு, ரகளை பண்ணிருக்கான். இதுக்கு இடையில, மனைவியோட நடத்தை மேல இசக்கி பாண்டிக்கு சந்தேகம் வந்திருக்கு. குடி போதையினால வீட்டுல ஏற்பட்ட பிரச்சினை போய், கடந்த சில நாட்களா மனைவியோட நடத்தை மேல சந்தேகப்பட்டு இசக்கி பாண்டி சண்ட போட்டுருக்கார். இதனால, கணவன் வீட்டுல இருந்து வெளியேறுன மகாலட்சுமி, ஆலங்குடி நெட்டூர்ல உள்ள தன்னோட பெற்றோர் வீட்டுக்கு போய்ட்டாங்க. கடந்த சில மாதங்களா மாமியார் வீட்டுல இருந்த மகாலட்சுமிக்கு இசக்கிபாண்டி ஃபோன் பண்ணி பாத்திருக்காரு. ஆனா, மகாலட்சுமி அந்த ஃபோன அட்டண்ட் பண்ணாம இருந்துருக்காங்க. இதனால, கடுப்பாகி மாமியார் வீட்டுக்கு போய், மனைவி மகாலட்சுமிய தன்கூட வீட்டுக்கு வரச்சொல்லி கேட்டுருக்காரு. ஆனா, இனிமே உன்கூட என்னால வாழ முடியாதுன்னு மகாலட்சுமி திட்டவட்டமா சொல்லிருக்காங்க. சம்பவத்தனைக்கு, நைட்டு, அதாவது, கடந்த 3ந் தேதி நைட்டு தன்னோட நண்பர்கள் மூணு பேர கூப்பிட்டுக்கிட்டு நெட்டூர்ல உள்ள மாமியார் வீட்டுக்கு கார்ல போயிருக்காரு இசக்கி பாண்டி. அங்க இருந்த மனைவி மகாலட்சுமிய வீட்டுக்கு வர சொல்லி மறுபடியும் டார்ச்சர் பண்ணதோட அடிக்க பாஞ்சிருக்காரு. மகள அடிக்க வந்தத பாத்ததும் கொந்தளிச்ச மகாலட்சுமியோட அப்பா, இசக்கி பாண்டிய தடுத்து நிறுத்திருக்காரு. ஒடனே மகாலட்சுமி, பக்கத்துல உள்ள நெட்டூர் புற காவல் நிலையத்துக்கு ஃபோன் பண்ணி இன்பார்ஃம் பண்ணிருக்காங்க. கொஞ்ச நேரத்துல சம்பவ இடத்துக்கு ஒரு பெண் போலீஸும், தலைமை காவலர் முருகனும் வந்துருக்காங்க.குடிபோதையில தகராறு பண்ணிட்டு இருந்த இசக்கி பண்டியையும், கூட இருந்த அவனோட நண்பர்களையும் அங்க இருந்து அப்புறப்படுத்தற பணியில இறங்குனாங்க. அப்ப, இசக்கி பாண்டி அவளுக்கு ஆதாரவா பேசுறீங்களான்னு கேட்டு, தலைமை காவலர் முருகன, தகாத வார்த்தைகளால வசப்பாடிருக்கான். அதோட, என்கூட வந்து வாழ மாட்டேன்னு சொன்ன நீ இந்த உலகத்துலேயே வாழக்கூடாதுன்னு சொல்லி மனைவி மகாலட்சுமிக்கிட்ட எகிறிருக்கான் இசக்கி பாண்டி. அப்போ, தலைமை காவலர் முருகன், இசக்கி பாண்டிய தடுத்து நிறுத்தி கண்டிச்சிருக்காரு. இதனால, ஆத்திரமடைஞ்ச இசக்கி பாண்டி, முருகன தள்ளி விட்டு தகராறுல ஈடுபட்டுருக்காரு. கூட இருந்த பெண் போலீஸ் வீடியோ ரெக்கார்டு பண்ணிட்டுருந்துருக்காங்க. அத பாத்த இசக்கி பாண்டி, ஓடிபோய் கார்ல இருந்த அரிவாள எடுத்துட்டு வந்து முருகன வெட்ட பாஞ்சிருக்கான். அந்த தாக்குதல இருந்து நாலு முறை தப்பிச்ச முருகனோட கை பகுதில சரமாரியா வெட்டிருக்கான் இசக்கி பாண்டி.உயிர காப்பாத்திக்கிறதுக்காக முருகனும், லேடி போலீஸும் அங்க இருந்து ஓடிருக்காங்க. அதுக்குப்பிறகு, இசக்கி பாண்டியும் தன்னோட நண்பர்களோட வந்த கார்லேயே எஸ்கேப் ஆகிட்டான். அடுத்து, சிசிடிவி கேமரா காட்சிய வச்சு தலைமறைவான இசக்கி பாண்டிய பிடிக்க, ஸ்பெஷல் டீம் அமைச்சு தேடுதல் வேட்டையில இறங்குனாங்க போலீஸ். அப்ப, இசக்கி பாண்டி நெல்லையில பதுங்கி இருந்தது தெரியவரவே, ஸ்பாட்டுக்கு போன போலீஸ்காரங்க இசக்கி பாண்டிய சுத்து போட்டுருக்காங்க. அதுக்குப்பிறகு, இசக்கிபாண்டி மேல வழக்குபதிவு பண்ண போலீஸ் அவன கைது செஞ்சு விசாரணை நடத்திட்டு இருக்காங்க.