சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த முத்துப்பட்டினத்தில் சொத்து பிரச்சனை காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து தம்பி வெட்டியதில் படுகாயமடைந்த அண்ணன், பட்டா கத்தியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவபாண்டியன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.