கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய கூட போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். கம்மியம்பேட்டையை சேர்ந்த வேன் ஓட்டுநரான கார்த்திக் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.போதிய மருத்துவர்கள் இல்லாததாககூறி கார்த்திக் உடலை உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதாக மருத்துவர்கள் கூறியதால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடலூர் மருத்துவமனையிலேயே உடற்கூறு ஆய்வு செய்யப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.