கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் கூறி, பெண்ணிடம் 20 லட்ச ரூபாய் மோசடி செய்த மதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட இருவரை தக்கலை போலீசார் கைது செய்தனர். பள்ளியாடி முருங்கவிளையை சேர்ந்த ஜினிலா, கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், பள்ளியாடியை சேர்ந்த மதிமுக முன்னாள் கவுன்சிலர் குமார், மதுரையை சேர்ந்த இம்ரான் ஆகியோர் கிரிப்டோ கரன்சியில் 1 லட்சம் முதலீடு செய்தால் 2 லட்சமாக திரும்பக் கிடைக்கும் எனக் கூறியதை நம்பி 20 லட்சம் கொடுத்துள்ளார். பல மாதங்கள் ஆகியும் பணம் கிடைக்காததால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகாரளித்தார்.