விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி மார்க்கெட் வீதிகளில், விநாயகர் சிலைகள், பூஜை பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரிய மார்க்கெட், நேரு வீதி மற்றும் பாரதி வீதிகளில், விநாயகர் சிலைகள், அதற்கு தேவையான அருகம்புல், எருக்கம்பூ மாலை, குடை உள்ளிட்ட அலங்கார பொருட்கள், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மண்பிள்ளையார், காகித பிள்ளையார் என ஒரு அடி முதல் 12 அடி வரை விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மண் பிள்ளையார் 100 முதல் 700 ரூபாய் வரையிலும், காகித பிள்ளையார் 6 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆறு பழ வகைகள் கொண்ட செட் 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.