திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த லேசான மழைக்கு மத்தியிலும் சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். இந்தநிலையில், நட்சத்திர ஏரியில் படகு சவரி செய்ய சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில், சாரல் மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.