புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கொட்டும் மழையிலும் ஏராளமான மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். இதனால் மீன்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக வஞ்சிரம் 950 ரூபாய்க்கும், சங்கரா 550 ரூபாய்க்கும், இறால் 550 ரூபாய்க்கும், நண்டு 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.