தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான நாட்டுப் படகுகள் கடந்த வாரம் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இன்று, ஏராளமான நாட்டு படகுகள், ஏராளமான மீன்களுடன் கரை திரும்பின. இந்நிலையில், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுக ஏல கூடத்தில் மீன்களை வாங்க பொது மக்களின் கூட்டம் அலை மோதியது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையில் மீன்களுக்கு ஓரளவு விலை கிடைத்தது. பொது மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் மீன்கள் வழக்கத்தை விட அதிக அளவு வந்திருந்தது. ஓரளவு விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கேட்டமீன்கள் கிடைத்த நிலையில், மீன் பிரியர்களும் மகிழ்ந்தனர்.