மிலாடி நபி விடுமுறை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தால், சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மூஞ்சிக்கள், கல்லறை மேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.