பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ராமநாதபுரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரமும், மிளகாய் பயிர்களுக்கு 25 ஆயிரம் வழங்க வேண்டும், டெல்லியில் போராடிய விவசாய தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு வைகைப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுபட சென்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.