கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை பொதுமக்கள் பிடித்து பின்னர் வனத்துறையினர் உதவியுடன் பாதுகாப்பாக குளத்தில் விட்டனர். குமராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் முதலை புகுந்த நிலையில், இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கயிறு மூலம் கட்டி வைத்துவிட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாதுகாப்பாக முதலையை பிடித்து சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரம் மாரி என்ற குலத்தில் விட்டனர்.