திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பதவியேற்ற எஸ்.பி சுதாகர் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவண்ணாமலை தீபத்திற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், பக்தர்களுக்கு அனைத்து வசதியும் செய்து தரப்படும் எனவும் கூறினார்.