தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கக்கூடிய குற்றங்களால் வெட்கமும், வேதனையும் அடைவதாக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்தார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் சமூக நீதி பேசப்படுகிறதே தவிர அது நடைமுறையில் இல்லை என்றும், இந்திய அளவில் தலித் மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் தமிழகம் முன்னிலை வகிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.