ஈரோட்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 20 ஓவர்களை கொண்ட இந்த கிரிக்கெட் போட்டியில் 22 கல்லூரிகள் பங்குபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் அம்மன் கலைக்கல்லூரியும் கோபி கல்லூரியும் மோதியது. இதில் அம்மன் கலைக்கல்லூரி வெற்றிவாகை சூடியது.