மதுபோதை கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலுவின் உடல் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழங்க காவல் துறை அதிகாரிகள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.