புதுச்சேரி கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் கைவினை பொருட்கள் இடம்பெற்றுள்ளன. முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்த இக்கண்காட்சியில், மகாராஷ்டிராவின் விரல் பியானோ பலரையும் ஆடவும் பாடவும் வைத்தது. ராஜஸ்தான் கலைஞர்கள் யானை சாணத்தில் இருந்து தயாரித்து கொண்டு வந்துள்ள காகித பொருட்கள், பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளன.