கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை மேம்பாலத்தின் மையப் பகுதியில் உள்ள இணைப்பில் விரிசல் ஏற்பட்டதால், அரை அடி நீளத்துக்கு பாலம் விலகியுள்ளது. இதனால், மேம்பாலத்திற்கு முன்பாக உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் பற்றாக்குறை... குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி நின்ற சிறுவன்