முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், குரு பூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் மரியாதை செலுத்தினார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118ஆவது ஜெயந்தி மற்றும 63ஆவது குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, மதுரையில் இருந்து துணை ஜனாதிபதி சிபிஆர், ராணுவ ஹெலிகாப்டர் மூலம், பசும்பொன் வந்தார். முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த நிர்வாகி எச்.ராஜா உடனிருந்தனர்.பின்னர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:தனது ஜமீன் சொத்துக்களில் பெரும் பகுதியை பிற சமுதாயத்தினருக்கு வழங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். பற்றற்ற பண்பாளர் தேவர் திருமகனார். அவரைப் போற்றுவது தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்றுவதாகும். நேதாஜியின் தளபதியாக திகழ்ந்தவர் வீரத்திருமகனார் முத்துராமலிங்க தேவர். சத்தியம், வாய்மையை கடைபிடித்தவர். இவ்வாறு சிபிஆர் தெரிவித்தார். இதையும் பாருங்கள்... முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய துணை ஜனாதிபதி | cpradhakrishnan | ThevarGuruPooja