அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி உண்ணவிரத போராட்டம் நடைபெற்றது.