மதுரையில் வீட்டு வசதி வாரிய நில எடுப்புக்கான பணத்தை முழுமையாக வழங்காததால், மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் காரை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. தத்தனேரி பகுதியில் கடந்த 1973ஆம் ஆண்டு கருப்பையா என்பவருக்கு சொந்தமான 214 சென்ட் நிலத்தினை 19ஆயிரத்தி 618 ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில் கருப்பையா தரப்பினர் கூடுதல் மதிப்பு கேட்டு தொடர்ந்த வழக்கில் சென்ட் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 2லட்சத்தி 14ஆயிரம் ரூபாய் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தொகையை முழுமையாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதால், மனுதாரரின் வாரிசுதாரர் நீதிமன்ற ஊழியர்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரின் கார்களை ஜப்தி செய்ய வருகை தந்தனர்.