நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பணியாளர்கள் 2 பேருக்கும் சோழிங்கநல்லூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சென்னை வளசரவாக்கம் போலீஸார், நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுப்பதற்காக சீமான் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, வீட்டுக்குள் நுழைய முயன்ற போலீஸாரை, சீமான் வீட்டு பாதுகாவலர் முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ், உதவியாளர் சுபாகர் ஆகியோர் தடுத்ததில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் உதவியாளர் கோபி அளித்த புகாரின் பேரில் 2 வழக்குகள் பதிவு செய்த நீலாங்கரை போலீஸார், இருவரையும் கைது செய்தனர். இதில், 207 - A பிரிவு வழக்கில் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.