அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 44 பேரிடம் 3 கோடி ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்த தம்பதியை வேலூர் போலீசார் கைது செய்தனர். காட்பாடி அருகே அரும்பருதியை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கு, இளையநல்லூரை சேர்ந்த ஈசாக் - லதாமேரி தம்பதியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 20 லட்சம் கொடுத்தால் சேவூரில் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகத்தில் உதவி மேலாளர் பணியில் சேரலாம் என தம்பதி கூறியதால், மஞ்சுளா தனது மகளுக்கு வேலை வாங்கி தரும்படி 17 லட்சம் கொடுத்துள்ளார். சில நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில் அது போலி என தெரியவந்ததால் மஞ்சுளா புகார் அளித்தார்.