சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை ஆபாச வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் ஊடகத்தினரை பார்த்ததும் சந்திரமோகன் பயந்து ஓடினார். இந்நிலையில் அவர் மன்னிப்பு கோரிய வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.