ஈரோடு மாவட்டம் வரதநல்லூர் பகுதியில் அரசு பேருந்தும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் பைக்கில் சென்ற காதல் ஜோடி பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேஜஸ் மற்றும் ஜெயஸ்ரீ ஒன்றாக பணிபுரிந்து வந்த நிலையில், விடுமுறை தினத்தில் கோவையில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு நீலகிரி சென்று கொண்டிருந்தனர். பைக்கை அப்பெண் ஓட்டி வந்த நிலையில் எதிராக வந்த பேருந்துடன் மோதியது.