திருச்சி மணப்பாறை அருகே கத்தி முனையில் தம்பதி மற்றும் குழந்தைகளை கட்டிப் போட்டு 10 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணத்தை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்றது. மணியங்குறிச்சியை சேர்ந்த அமர்ஜோதி என்பவரின் வீட்டிற்குள் மங்கி குல்லா, கையுறை அணிந்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெளியில் உறங்கிக்கொண்டிருந்த அமர்ஜோதியை தாக்கி, வீட்டிற்குள் சென்று அவரது மனைவி மற்றும் மகன், மகளை கட்டி போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.