திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 30 நாட்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 29 லட்சத்து 93 ஆயிரத்து 775 ரூபாய் செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, வசந்த மண்டபத்தில் எண்ணப்பட்டது. அதில், கடந்த 30 நாட்களில் 1 கோடியே 29 லட்சத்து 93 ஆயிரத்து 775 ரூபாய் ரொக்கமும், 635 கிராம் தங்கம், 9.4 கிலோ வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.