திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணி பேரூராட்சியில் பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக்கூறி செயல் அலுவலரிடம் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவசர கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் தாங்கள் இல்லாமல் எப்படி தீர்மானத்தை நிறைவேற்றுவீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.