தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சி திமுக பெண் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கோரி, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 15 கவுன்சிலர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆண்டிப்பட்டி பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சந்திரகலா பதவி வகித்து வருகிறார். இவரது கணவர் பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரம் செய்வதாகவும், வார்டு பகுதிகளில் எந்த அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.