திருவாரூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு 26 கோடியே 21 லட்சம் ரூபாய்க்கு, பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளதாக ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு பருத்தி சாகுபடியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அறுவடை பணி நிறைவு பெற உள்ள நிலையில், பருத்தி விற்பனை செய்வதற்காக, திருவாரூர், வலங்கைமான், குடவாசல், பூந்தோட்டம் உள்ளிட்ட 4 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, விவசாயிகள் பருத்தியை எடுத்து வந்து, விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், குறைந்த விலைக்கு விற்பனை போவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விலை கொடுத்து எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பருத்தி விற்பனை விவரம் வெளியாகி உள்ளது. திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 15 வாரத்தில், 15 ஆயிரம் விவசாயிகள் 2212 மெட்ரிக் டன் பருத்தி கொள்முதல் மதிப்பு ரூ.15 கோடியே 33 லட்சம் வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4608 விவசாயிகள்661 மெட்ரிக் டன் கொள்முதல் மதிப்பு ரூ.4.87 கோடிகுடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்,1909 விவசாயிகள்250.680 மெட்ரிக் டன் கொள்முதல் மதிப்பு ரூ.1.76 கோடிபூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 4344 விவசாயிகள்594.268 மெட்ரிக் டன் கொள்முதல்மதிப்பு ரூ.5.94 கோடிஒட்டுமொத்தமாக, மாவட்டம் முழுவதும் இதுவரை 25,863 விவசாயிகளிடமிருந்து 3719.402 மெட்ரிக் டன் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு 26 கோடியே 21 லட்சம் ரூபாய் என்றும் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.