மதுரை மாவட்டம் திருநகரில் மாடுகளை பிடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளின் வாகனத்தின் முன்பு மாடுகளை பிடிக்க கூடாது என கூறி இரு முதியவர்கள் சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக புகார்கள் வந்ததையடுத்து அவ்வாறு சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த வகையில் மதுரை திருநகர் சாலைகளில் சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து வாகனங்களில் ஏற்றி கொண்டிருந்தனர்.அப்பொது அங்கு வந்த மாற்றுத்திறனாளியான முத்தையா என்பவர் மாடுகளை பிடிக்க கூடாது என கூறி வாகனம் முன்பு படுத்து போராட்டம் நடத்தினார்.